July 8, 2025
யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!

Apr 11, 2024

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10) நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் கூற்று சோதனைக்கு பிறகு குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *