நேற்று மாலை 5.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் இன்று காலைவரை திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந் நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,

சடலத்தின் நாடிப் பகுதியில் காயம் ஒன்று காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here