அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை கயிற்றுடன்  கிணற்றில் இறக்கிய போது கால் தடுமாறிய நிலையில் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.

கிணற்றில் அதிகளவு நீர் நிறைந்து காணப்பட்டமையால் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் தோப்பு பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பிரதீபன் தர்சன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ் நிருபர்-லோயன் விஜய்குமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here