யாழ்ப்பாணம் சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து 63 வயதுடைய சின்னத்துரை தவராசா என்ற குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.