யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்!
யாழ் அரியாலைப் பகுதியில், சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னா பதவியேற்பின் பின்னர் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த கண்காணிப்பை நடத்தும்போது, மணல் ஏற்றப்பட்ட குறித்த வாகனத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக எந்தவொரு கைது நடவடிக்கையும் இன்னும் நடைபெறவில்லை. பொலிஸார் சம்பவத்தை குறித்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)
![]()