யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இரண்டு வெதுப்பகங்கள் சுகாதார சீர்கேடாக இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் நேற்று (24.06) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.
வழக்குகளினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும் மற்றைய வெதுப்பகத்தினை சீர் திருத்துமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்துள்ளார்.
Post Views: 2