யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதோடு, ஆணைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளார்.
அத்துடன் இரு உணவகங்களை சீல் வைத்து மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.