சென்னையில் இருந்து இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிஆவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானமே இவ்வாறு தரையிறக்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.