Tamil News Channel

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்..!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அடுத்து அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts