அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதி சம்பவிடத்தில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பனுஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையிலேயே இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் மீதான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.