யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் (11) வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில்  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
   
சம்பவ இடத்திற்கு விரைந்து சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார்  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிகம் வெளியிட்டுள்ளனர்.
 குறித்த முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவ இடத்தில் இன்றைய தினம்(11)  மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்தனர்.