November 18, 2025
யாழில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு…!
News News Line Top Updates புதிய செய்திகள்

யாழில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு…!

Apr 30, 2024

யாழ் – சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார்.

கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்ற வேளை  திடீரென உடல் மேலும் சுகயீனம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது  அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *