யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர், கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்ற நிலையில் அவருடன் வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார்.
இதன்போது கணவன் அயல் வீட்டாருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post Views: 2