யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமையால் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் மல்லாகம் நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.