யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலும் கைப்பற்றிய கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.