February 11, 2026
யாழ்ப்பாணத்தில் 87 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 87 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

Jul 13, 2024

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த 47 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொடிகாமத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரே தனக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொடிகாமத்தில் உள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கிருந்து 87 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அங்கிருந்து சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைதான இருவரும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *