யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மணவாளக் கோல விசேட பூஜை நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் குருக்கள், கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள், ஓம குண்டம் எழுப்பி, வணங்கி, 1008 சங்காபிஷேகம், நீராடல் நடந்தது.
அதன்பின், மாலை 5:00 மணியளவில் வசந்த மண்டப பூஜைகள் நடந்து, ஆழ்வார் வள்ளிபுரத்தில் உலா வந்தார்.
இன்றைய மணவாளக்கோலம் சிறப்பு வழிபாட்டில் வல்லிபுரம், துன்னாலை, கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இப் பூஜைக்கு கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 5