Wednesday, March 11, 2026

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023 ஆரம்பமானது

Must Read

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில் நடாத்தப்படும் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி நேற்றைய தினம் (08) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி வரை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறவுள்ளது.

போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறி சற்குணராஜா கலந்துகொண்டதுடன், இந்திய துணைத்தூதரக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய, ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

சர்வதேச தரத்தில் நடத்தப்படும் இந்த சதுரங்க போட்டியில் 800 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளதாகவும், போட்டியானது 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி சர்வதேச ரீதியில் அமைந்துள்ளதால், எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights