Tamil News Channel

  யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவசமாக தொழில்நுட்ப கல்வி!

WhatsApp Image 2024-06-30 at 14.19.06_16ab0ec1

My Dream Academy – DP Education IT Campus ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள coding கற்கை நெறி கற்கைகளை கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்  (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெற்றது.

DP EDUCATION நிறுவன ஸ்தாபகரும், தலைவருமான, பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா,  My dream academy நிறுவனரும், பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்கேற்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள் தமக்கான திறமைச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விப்பாரம்பரியத்தின் புதிய அத்தியாய தொடக்கமாக இந்நிகழ்வு அமைவதோடு, தகவல் தொழில்நுட்ப கல்வியை முற்றிலும் இலவசமாக எமது இளையோருக்கு கொடுப்பதன் ஊடாக, தொழில்நுட்ப புரட்சியொன்றை எம்மண்ணில் ஏற்படுத்துவதே My Dream Academy இன் நோக்கமாக உள்ளது.

இதன்படி, நல்லூர், புத்தூர், வல்வெட்டி, நெல்லியடி, தெல்லிப்பழை, சுன்னாகம், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் இக்கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக கற்பிக்கப்படுகின்றன.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts