யாழ்.கொடிகாமத்தில் தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி!
யாழ்.கொடிகாமத்தில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் நட்சத்திர மஹால் திருமண மண்டபத்திற்கு அருகாமையில் பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காங்கேசந்துரையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதம் கொடிகாமம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பெண் ஒருவர் கொடிகாமம் நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள கடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சுன்னாகம் தெற்கு சுன்னாகம் பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய சங்கீதா உசாந்த் என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த பெண் பளையை பிறப்பிடமாக கொண்டவர் எனவும் பளைப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)
![]()