February 11, 2026
யாழ். சாவகச்சேரி  A9 வீதியில் விபத்து.! ஒருவர் பலி..!
புதிய செய்திகள்

யாழ். சாவகச்சேரி  A9 வீதியில் விபத்து.! ஒருவர் பலி..!

Jun 12, 2024

யாழ். சாவகச்சேரி  A9 வீதியில் கைதடி- நுணாவில்  பகுதியில் டிப்பருடன் மோதுண்டு இளங் குடும்பஸ்தர் ஒருவர்  சம்பவ இடத்தில்  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(12) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர்  வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மீது  மோதுண்டு  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்தவர் 34 வயதுடைய இளங் குடும்பஸ்தர் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்த தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். இச் செய்தியை எமது பிராந்திய செய்தியாளர் எமக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *