யாழ்.தென்மராட்சி கண்டுவில்- ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று(20) சிறப்பாக இடம் பெற்றது.
அம்பாள் தேரேறிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதன்போது தூக்குக்காவடி, காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்.
பத்து நாள் இடம்பெறும் திருவிழாவில் நாளைய தினம் தீர்தோற்சவம் இடம்பெறும்.