யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக  மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக  மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here