யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திருட்டு

0
7

யாழ்ப்பாணத்தில் பொறுத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்களில் ஒன்று நேற்று (18) காணாமல் போயுள்ளது.

எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது.

அவ்வாறு யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்திலும் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த இயந்திரமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here