யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நாளை 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி அந் நாளில் கிளிநொச்சி நகரில் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளனர்.
மேலும், போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது எனவும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி விடுத்துள்ளார் .
மேலும் இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக சமூகம்.தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக் கட்டமைப்பு சார் இனப்படுகொலைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது என
தமிழ் மக்கள் கூட்டணி இப் போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவினை தெரிவிப்பதோடு அனைத்து தரப்பினர்களும் இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம் என்றுள்ளது குறிப்பிடதக்கது.