November 13, 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

Jul 13, 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது. இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.

இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியாவில் போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.

இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான ஒரு விடயங்களை கொண்டுள்ளது.  இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது.

ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் Dr. ரமேஸ் பத்திரன அவர்களால் வைபவ ரீதியாக எதிர்வரும் கிழமை திறந்து வைக்கப்படும்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *