Tamil News Channel

ரஜினியின்  தீவிர ரசிகரான ஷங்கர்..

இயக்குனர் ஷங்கர் கல்லூரி காலத்தில் தீவிரமான ரஜினியின் ரசிகராக இருந்துள்ளாராம். ரஜினியின் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அனுபவம் பற்றி இவர் பேசியிருக்கின்றார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு மிப்பெரிய ஆளுமையாக இருந்து வருகின்றார். தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் வசனங்களாலும் பலகோடி ரசிகர்களை சொந்தமாக்கியுள்ளார். என்னதான் வயதானாலும் இன்றளவும் தன்னால் சாதனை படைக்க முடியும் என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் மேலும் உணர்த்தியுள்ளார் .

தற்போதும் ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் ரஜினி. அந்த வகையில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக கூலி என்ற படத்திலும் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

பலரும் ரஜினியின் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறி வந்தனர். ஆனால் ரசிகர்களாக இருக்கட்டும் திரைத்துறையை சார்ந்தவர்களாக இருக்கட்டும் ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல ரஜினி  தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றே தெரிகின்றது.

இந்நிலையில் ரஜினிக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையை சார்ந்த பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். தளபதி விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரும் தலைவரின் ரசிகர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரிசையில் இயக்குனர் ஷங்கரும் ஒருவர். பிரம்மாண்ட படைப்புகளின் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஷங்கர்.

இவர் ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2 .0 என மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கல்லூரி படிக்கும் காலகட்டங்களில் தீவிரமான ரஜினியின் ரசிகராக இருந்துள்ளதாக கூறியுள்ளார். ஷங்கர். இப்போது எப்படி ரஜினியின் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் கிடைப்பது கஷ்டமோ அதைப்போல தான் 80 களிலும்.

ரஜினியின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது மிகப்பெரிய விஷயமாம். ஷங்கர் எப்படியாவது கஷ்டப்பட்டு ரஜினியின் படத்திற்கு முதல் ஷோவிற்கான டிக்கெட்டை வாங்கிவிடுவாராம். சென்னையில் உள்ள திரையரங்கில் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்பதால் புறநகர் பகுதியில் இருக்கும் திரையரங்கில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பாராம்.

அந்த வகையில் ஒரு ரஜினியின் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட் வாங்கியிருக்கிறார். படம் பார்க்க ரயிலில் சென்றுள்ள ஷங்கருக்கு ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காலில் அடிபட்டுள்ளது. காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட அதையும் பொருட்படுத்தாது படம் பார்க்க சென்றுள்ளார். அந்த அளவிற்கு ரஜினியின் வெறித்தனமாக ரசிகராக இருந்துள்ளாரராம். இதைப்பற்றி ஒரு பேட்டியில் ஷங்கர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts