July 14, 2025
ரஜினி படத்தை வேண்டாம் என கூறிய முன்னணி நடிகர்..!
சினிமா

ரஜினி படத்தை வேண்டாம் என கூறிய முன்னணி நடிகர்..!

Jun 4, 2024

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அவரே கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜுடன் ரஜினி முதல் முறையாக கைகோர்த்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜூன் 10ஆம் தேதியில் இருந்து கூலி படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியின் நண்பன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவிருந்ததாக உறுதியாக கூறப்படுகிறது. நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பேட்டியில் கூட அதனை உறுதி செய்தார். கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. அதே போல் ரன்வீர் சிங்கிடம் இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்ததாம்.

ஆனால், ரன்வீர் சிங் நான் பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறேன் என கூறி கூலி திரைப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *