அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கடன் வலையில் சிக்க வைத்த குற்றச்சாட்டில் இருந்து நாட்டின் ஆட்சிக்கு பங்களிப்புச் செய்த எந்தவொரு அரசியல் கட்சியையும் விடுவிக்க முடியாது.
அநுர எடுத்த கடனை ரணில் தற்போது செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுனவும் நாட்டின் ஆட்சிக்கு பங்களித்த கட்சி என்று தெரிவித்த வஜிர அபேவர்தன, அந்த ஆட்சியின் போது பெற்ற கடனை ரணில் விக்கிரமசிங்க தற்போது செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.