முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.








