Tamil News Channel

ரணில் பக்கம் சாய்கின்றனரா? ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர்கள் ..!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணைய வேண்டும் என தற்போது புதிதாக சஜித் அணியினுள் பாரிய அழுத்தம் வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என சஜித் தரப்பின் பிரபல தலைவர்கள் சிலர் வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரபல வர்த்தகர்கள் சிலரும் ரணில் – சஜித் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அவை எதுவும் செயற்படவில்லை.

இந்நிலையில், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் சஜித் குழுவினரை மீண்டும் இணைத்துக் கொள்வது தொடர்பில் பூரண ஒத்துழைப்புடன் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் தவிர பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியை முகம்கொடுக்க வேண்டும் என்ற பொதுவான எண்ணக்கருவுக்கு உடன்பட்டுள்ளனர்.

சஜித்துடன் இணைந்திருக்கும் பிரபல பொருளியல் நிபுணரும் முன்னாள் ஊடகவியலாளருமான ஹர்ஷ டி சில்வாவும் ரணில் தரப்புடன் இணைவதற்குத் தயாரக இருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts