எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ‘’Puluwan Sri Lanka” உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) காலை பத்தரமுல்லையில் உள்ள Waters Edge ஹோட்டலில் இடம்பெற்றது.