ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினருமான நசீர் அஹமட்டினால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள போதிலும், இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான SLMC இன் உச்ச சபை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்கும் திட்டத்தை அறிவித்தது.