ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைத்து, திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இணைந்து புதிய சின்னத்தில் புதிய கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கலந்துரையாடி வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.