
ரமெஷ் பத்திரணவால் புதிய உறுப்பினர்கள் நியமனம்..!
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேரை சுகாதார அமைச்சர் ரமெஷ் பத்திரண நியமித்துள்ளார்.
அதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இன் சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த, பாலித குமாரசிங்க ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்ட மூன்று நிர்வாக சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததைத் அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணக்கியல் துறையைச் சேர்ந்த சுபுல் விஜேசிங்க, சட்டத் துறையைச் சேர்ந்த சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் நிர்வாகத் துறையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பிரியந்த சேரசிங்க ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.