ரஸ்யாவின் டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ வழிபாட்டுதலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் பெந்தகோஸ்மத பிரிவினரின் மதவழிபாட்டு நிகழ்வின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இத்தாக்குதலில் குறைந்தது 15 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கறுப்பு நிற ஆடையணிந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தொடரணி மீது தாக்குதலை மேற்கொள்ளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. எனினும் கடந்த காலங்களில் டாகெஸ்தான் பல தடவை இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.