ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு கிடைக்கும் நிதி மூலத்தை முடக்கும் நோக்கில் ‘ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தில்’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்தின்படி ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலம் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 262-159 வாக்குகள் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

உக்ரைனுக்காக குரல் கொடுத்து சமீபத்தில் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமை நினைவுகூரும் வகையில் இந்த சட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது (Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026).

இந்த புதிய சட்டம் ரஷ்ய அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், எரிசக்தி துறை மற்றும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here