விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் 47 வயதுடையவர் எனவும் திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.