Tamil News Channel

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தில் புரளும் அந்த 3 ராசிகள்..!

raaku

இன்னும் சில தினங்களத்தில் ராகு பகவான் இடமாற்றம் அடையும் நிலையில், இதில் அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரைக் குறித்து தெரிந்துகொள்வோம்.

ராகு பகவான்

வரும் ஜுலை 8ம் தேதி ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்தில் நுழைகின்றார். பொதுவாக நட்சத்திரங்கள், கிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு நன்மையையும் ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடிய ராகுபாவான், எப்பொழுதும் பின்னோக்கிய பயணிக்கக்கூடியவர்.

ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். நவகிரகங்களில் சனி பகவானுக்கு பின்பு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். இதில் அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினருக்கு ராகுவின் இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் சிறப்பான பலனை கொடுக்கின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிவடைவதுடன், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகவே அமையும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம், பணவரவில் எந்தவொரு குறையும் இல்லாமல், பணி இடங்களில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபமும், பங்குச்சத்தையும் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியில் இருக்கும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்குமாம்.

துலாம் ராசி

திடீர் பணவரவினால் மகிழ்ச்சியில் மூழ்கும் துலாம் ராசியினருக்கு, புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. பதவி மற்றும் சம்பள உணர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் மற்றும் தொழிலில் புதிய நன்மைகள் கிடைப்பதுடன், நல்ல யோகத்தையும் ராகு பெயர்ச்சி கொடுக்கின்றது. உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல யோகத்தினை கொடுக்கின்றது. பணவரவில் எந்த குறையும் இல்லாமல், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம், தொழிலில் நல்ல முன்னேற்றமும் வருமானத்திற்கான நல்ல ஆதாரங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts