2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் லக்னோ அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது.
இப்போட்டியில் சென்னை அணியின் தலைவர் ருத்துராஜ் கைக்வாட் 60 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
211 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 124 ஓட்டங்களை பெற்று லக்னோ அணியை வெற்றிபெற செய்தார்.
இந்த வெற்றியுடன் லக்னோ அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் நான்காவது நிலைக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதில் குஜராத் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது நிலையில் உள்ளது.
டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது நிலையில் உள்ளது.
நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.