Tamil News Channel

ரோயல் சேலெஞ்சர்சை வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ்..!

நேற்றைய தினம் ஆரம்பமாகிய ipl தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings)  06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal challengers bengluru) அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணி  20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணி சார்பில் அனுஜ் ராவத் (Anuj Rawat) 48 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) 38 ஓட்டங்களையும் ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf du Plessis) 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.

பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) 04 விக்கெட்டுக்களையும் தீபக் சாஹர்(Deepak Chahar) 01 விக்கெட்டையும் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings)  அணி சார்பில் பெற்றனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai super kings)  அணி 18.4 ஓவர்களில் 04 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings) அணி சார்பில் ரச்சின் ரவீந்திரன் (Rachin Ravindra) 37 ஓட்டங்களையும் சிவம் துபே(Shivam Dube) 34 ஓட்டங்களையும் அஜிங்க்யா ரஹானே(Ajinkya Rahane) 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.

பந்துவீச்சில் கேமரூன் கிரீன்(Cameron Green) 02 விக்கெட்டுக்களையும் கர்ண் சர்மா(Karn Sharma) மற்றும் யாஷ் தயாள்(Yash Dayal ) தலா 01 விக்கெட்டு வீதம் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru)  அணி சார்பில் வீழ்த்தினர்.

தொடரின் ஆட்டநாயகனாக சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings)  அணியின் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) தெரிவானார்.

இன்றைய  நாளின் முதலாவது  போட்டியாக பஞ்சாப் கிங்ஸ்(Punjab kings) மற்றும் டெல்லி கெபிடல்ஸ்( Delhi capitas )  ஆகிய அணிகள் தற்சமயம் மோதி வருகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts