கோப் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ரோஹிதவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊழல்,மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுdan இந்த முறைப்பாடு சட்டவிரோத நிதிச் சொத்துக்கள் பிரிவிடம் அதிகாரகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவான ரோஹித இதுவரையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் எனவும் இந்தக் காலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
ரோஹிதவின் வங்கி கணக்குகள், அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகள் என்பன கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டுமென முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.