குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் – தம்புள்ளை வீதியில் முத்தெட்டுகல பகுதியில் லொறி மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த பாதசாரி மீது குருணாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2