Tamil News Channel

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்ல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

20 ஏக்கர் வனப் பரப்பில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் 1,200 ஏக்கர் வனப் பரப்பில் பரவியதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

13,000 கட்டடங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளதாக கலிபோர்னியா தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மணித்தியாலத்துக்கு 126 முதல் 160 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதால் தீப்பரவல் வேகம் அதிகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் காட்டுத் தீப்பரவல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts