January 20, 2026
வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்
News News Line Top Updates புதிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்

Nov 29, 2023

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடகீழ் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, தென்,வடமத்திய, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய வேளையில் அவதானத்துடன் செயற்பட்டு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *