வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதல் முறையாக ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
அத்தோடு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவுகள் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் பாலம்பிகை மண்டபத்தில் நேற்று (04.02) மாலை இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக சிவகுமார் திவியா தெரிவு செய்யப்பட்டார்.
வடக்கு கிழக்கில் பெண் ஒருவர் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடதக்கது.
அத்துடன், சங்கத்தின் செயலாளராக சி.கஜேந்திரகுமாரும் பொருளாளராக சிறிதரன் மனோஜூம் உபதலைவராக இராசையா ஜெய்சங்கரும் உப செயலாளராக வரதராசா பிரதீபனும் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் ஆலோசகராக முன்னாள் தலைவர் சு.வரதகுமார் அவர்களும், கணக்காய்வாளராக இ.சற்சொரூபனும் தெரிவு செய்யப்பட்டனர்.