2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 672 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:

“விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த அரசாங்கக் காணிகளும் அடங்குகின்றன. இந்த காணிகள் தொடர்பான தகவல்கள் பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டது.”

மேலும், கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here