வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் போட்டி மன்னாரில் ஆரம்பம்!

0
3

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்த வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி இன்று சனிக்கிழமை (ஜூலை 12) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் வடமாகாணத்திலிருந்து 6 அணிகள் மற்றும் அவர்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள், வடமாகாண பூப்பந்தாட்ட சங்க செயலாளரும் மற்றும் லீக் தலைவருமான எம். பிரின்ஸ் லெம்பேட் தலைமையில் இடம் பெற்றன.

ஆரம்ப நிகழ்வான இன்றைய தினம் சனிக்கிழமை (12)   விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,உதவி மாவட்டச் செயலாளர் வி.டில்சான் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதையடுத்து, பிரீமியர் லீக் கிண்ணம் மன்னார் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப் மற்றும் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அணிகளின் அறிமுகம் இடம் பெற்ற நிலையில் முதல் சுற்று ஆரம்பமானது.

 

(மன்னார் நிருபர் எஸ். ஆர். லெம்பேட்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here