வட்ஸ்-அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு – CID எச்சரிக்கை!
வட்ஸ்-அப் செயலியின் மூலம் பணம் கோரும் மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இத்தகைய மோசடிகள் தொடர்பான பல முறைப்பாடுகள் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ. ஜி. ஜயனெத்சிறி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “வட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தும் போது பயனர்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம்,” எனவும் எச்சரித்துள்ளார்.
![]()