November 18, 2025
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் -ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் -ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

Oct 13, 2025

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று காலை (13) ஈடுபட்டனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சரியான பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக மூவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் சந்தித்து கலந்துரையாடியதோடு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *